செய்தியாளர்களை குரங்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

செய்தியாளர்களை குரங்கு என்ற வார்த்தயை பயன்படுத்தி குறிப்பிட்டது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்றும், சில செய்தி ஊடகங்கள் குறி வைத்து ஒரே கேள்வியை கேட்டால் கோபம் வருவது சகஜம் தான் எனவும் அண்ணாமலை கூறினார்.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றி கடன் செலுத்திவிட்டு, மத நல்லிணக்கம், மத ஒற்றுமை மற்றும் கோவை மக்கள் என்னுடைய வாழ்க்கை பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று மக்களுடன் இணைந்து கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாக பாடி உள்ளோம்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதன் பின்னர், எட்டு நாட்களாக அந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறோம். இதைத் தாண்டி கோவை செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்.

1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த பத்து வருடங்களாக கோவையில் உள்ள மக்கள் மற்றும் தொழிலதிபர்களே கோவையை முன்னெடுத்து செல்கின்றனர்.

இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும். அதனை தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களாக இருப்பது, இப்பொழுது இருக்கக்கூடிய காவல்துறையினர் தான்.

துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் உயிரை பணயம் வைத்து காவல்துறையினர் பணி செய்துள்ளனர். எனவே கோவை மாநகர காவல்துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். சதிகார்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.

23ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள் மதகுருமார்கள் கூட நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கோவையில் உள்ள மக்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.

மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம், மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர, மாநில அரசை குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல.

இந்த பேட்டியில் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) அண்ணாமலை காண்பித்தார். இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம். அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள். எனவே, அவர்களை விடக்கூடாது அவர்களின் மீது கோபமாக தான் இருக்க வேண்டும். கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளேன். காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளது.

உளவு பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டு விட்டார்கள். காவல்துறையில் பணி சுமையும் அதிகமாக உள்ளது. ஆள் பற்றாக்குறையும் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய்விட கூடாது. அதனை பாஜக கட்சி ஒரு வாய்ப்பாக வைத்து பேசவும் மாட்டோம். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கூற மாட்டோம். இச்சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக கட்சி விரும்பாது.

NIA இதனை டெரர் அட்டாக் என தற்போது கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு ஏன் டெரர் அட்டாக் என குறிப்பிடவில்லை. பந்த் அறிவிப்பை பொறுத்தவரை கட்சியின் அலுவலகத்தில் இருந்து கூறினால் தான் தலைவர் பொறுப்பாக முடியும். ஆனால், இது மாவட்ட நிர்வாகிகள் சில அமைப்புகள் முடிவெடுத்தது.

2022ல் 14 போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். அதே சமயம், எங்களுடைய அனுமதியின்றியும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்கு ஒரு பலமான அதிமுக தேவை அதை முடிவெடுப்பவர்கள் தொண்டர்களே. எனவே, அதிமுக கட்சி குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை.

நான் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறேன் என சொல்லக் கூடாது. வரம்பு மீறும் போது, எப்படி செய்தியாளர்கள் கோபம் கொள்கிறீர்களோ. அதேபோல், சில செய்தி ஊடகங்கள் குறி வைத்து ஒரே கேள்வியை கேட்டால் கோபம் வருவது சகஜம் தானே.



பத்திரிகையாளர்களை பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை. பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு போல் தாவி தாவி வந்து என்னை பேச விடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்?" என்று நான் கூறியது இரண்டும் வேறு வேறு. அப்போது செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அது குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...