ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைகளை மாநகராட்சி ஆணையர் (பொ) ஆய்வு


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு சாலையில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "கோவை மாநகராட்சியில் 6 இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ். புரத்தில் டி.பி.சாலை மற்றும் திருவேங்கடசாமி சாலை, திவான் பகதூர் சாலை, சாய்பாபா காலனியில் என்.எஸ்.ஆர் சாலை, ரேஸ் கோர்ஸ் சுற்றுச்சாலை, சங்கனூர் மெயின் ரோடு, மசக்காளிப்பாளையம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக ஆரம்பகட்ட செயலாக்கமாக ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு சாலை (1.8 கிலோ மீட்டர்) மற்றும் திருவேங்கடசாமி சாலை (1.2 கிலோ மீட்டர்)யில் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான இடங்களில் முதற்கட்டப் பணிகளான குறியீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த மாதிரி சாலைகள் கண்டுள்ள வாகன நிறுத்தும் இடம், நடைபாதை, சென்டர் மீடியன் ஆகியவை குறியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்த மாதிரி சாலைகளில் புட் பாத், மின்சார ஒயர்களுக்கான டிரென்ச் மற்றும் டக்ட், பி.எஸ்.என்.எல், தனியார் வடங்கள், வீடுகளுக்கான குடிநீர் பைப், டிராபிக் ரெகுலேசன் தொடர்பான போலீஸ் கேபில் லைன்கள், தெரு விளக்குகள், உயர்மட்ட கோபுர விளக்குகள் ஆகியவை செல்வதற்கான தனியான பொது டக்ட் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங், சிறப்பு நவீன கழிப்பிட வசதி, நவீனமயமான குப்பைத்தொட்டிகள், புதிய மரங்கள் நடுதல், சிறப்பு மாதிரி சாலைகளை ஒட்டி தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், சிறப்பு மருத்துவ உதவி மையம், ஜியோ டாகிங், ஒய்பை வசதி, வாகனத்தின் வேகங்களை கண்டறியும் கருவி, குடிநீர் வசதி, சுற்றுப்புற மாசு கண்டறியும் கருவி, அனைத்து வசதிகள் கூடிய ஸ்மார்ட் போல்ஸ், சாலைகளை கடக்கும் நடைபாதை வசதி, குறிப்பிட்ட இடவெளியில் மழைநீர் சேகரிக்கும் சிறப்பு ஆழ்துளைக் கிணறு அமைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் ஆகிய வசதிகள் இந்த மாதிரி சாலைகளில் ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முதற்கட்டப் பணிகளான மாதிரி சாலைகளான ஆர்.எஸ்புரம் டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி சாலைகளில் குறியீடு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் தியாகராஜன், ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...