மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து


மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஒரளவு பூர்த்தி செய்திருப்பதாக தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



2017- 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தொழில் முடக்கம் ஏற்பட்டு இருந்த நிலையில், தொழில் துறையினர் இந்த நிதிநிலை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததாக தெரிவித்தார். 

நிதிநிலை அறிக்கை தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை எனினும், ஓரளவு பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

5 இலட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் தனிநபருக்கு வருமான வரியினை பாதியாக குறைத்து இருப்பதற்கும், சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வருமான வரியினை 25 சதவீதமாக குறைத்து இருப்பதற்கும், மறைமுக வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாதது உள்ளிட்டவற்றிக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். 

மேலும் அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவுமெனவும் கூறிய அவர், மின்னணு பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்திற்கென இந்த பட்ஜெட்டில் இரயில்வே தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், இந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் இந்த நிதி நிலை அறிக்கை நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் எனவும், நீண்ட கால அடிப்படையில் தொழில் துறையினருக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஊரக பகுதிகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...