கோவை மசக்காளிபாளையம் அரசு பள்ளியில் ஜனநாயக முறையில் நடைபெற்ற 'மாணவர் மன்ற' தேர்தல்...!

தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த மாதிரியான மாணவர் மன்ற தேர்தல் மூலம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே பள்ளி மாணவர்களிடையே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஜனநாயக முறைப்படி மாணவர்கள் அவர்களது பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், மசக்காளிபாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பீளமேடு அடுத்த மசக்காளிபாளையத்தில் மாநகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 420 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம், ஸ்மார்ட் டீச்சிங் என தனியார் பள்ளிகளுக்கு நிகரான பல்வேறு கற்பித்தல் வசதிகள் பின்பற்றப்பட்டு, தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது இந்த பள்ளி என்றால் அது மிகையாகாது.



இந்நிலையில், இந்த பள்ளியின் மாணவர் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்யும் பொருட்டு, மாணவர் மன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.



இதில், அப்பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர்.



இன்று காலை துவங்கிய தேர்தலில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.



மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஆசிரியரிடம் கொண்டுச் செல்வதை விட மாணவர்களின் பிரதிநிதி மூலம் கொண்டுச் செல்லும் போது ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும், இந்த மாதிரியான மாணவர் மன்ற தேர்தல் மூலம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...