Just in: கோவையில் மோசடியில் ஈடுபட்ட 5 நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க போலீசார் அறிவுறுத்தல்..!

Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம்.



கோவை: கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான 5 நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவையில் செயல்பட்டு வந்த Green Crest, Dreams Maker, Arrow Trading, Vinn Wealth மற்றும் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் வந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து கோடி கணக்கில் முதலீட்டை பெற்று அதனை திருப்பி தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த 5 நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...