'போதை பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம்' அமைப்பது குறித்து கோவை மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.


கோவை: போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது குறித்து மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சிகளில் உடல் நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளிலும் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பான எண்ணையும் அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...