கோவையில் IFS-நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை..!

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS-நிறுவனத்தில் ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் IFS-நிறுவனத்தின் ஆடிட்டர் வீட்டில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS -சர்வதேச நிதி சேவை மையம் மீதுநிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, வேலூர், கோவை உட்பட தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. IFS சர்வதேச நிதி சேவை மையம் மற்றும் அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள IFS சர்வதேச நிதி சேவை மையத்தின் ஆடிட்டர் வெண்ணிலா என்பவரது வீட்டில்சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...