வால்பாறையில் கனமழையால் மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயமின்றி தப்பினர்

கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கன மழையால், நகராட்சி அலுவலகம் அருகே பெரிய மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் காயமின்றி தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்து வருகிறது.



இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சாலையில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது.



மேலும் வால்பாறை நகராட்சி வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மரம் திடீரென உடைந்து விழுந்தது, மரம் விழுந்த இடத்தின் அருகில் பேருந்துக்காக அங்கு நின்று காத்திருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பினர்.



ஆனால் அதன் அருகில் இருந்த பூ கடை ஒன்று மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது.

வால்பாறை பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சிரமமடைந்து உள்ளனர், இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் கனமழையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...