திருப்பூர் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதல் 4 பேர் பலி, 2 பேர் படுகாயம்

திருப்பூரை அடுத்த, கொடுவாய்காக்காபள்ளம் என்ற இடத்தில், அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். உடன் பயணித்த இருவர் படு காயங்களுடன் திருப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து, ஒரு காரில் 6 பேர் திருப்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர், அவர்கள வந்த கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்து.



அப்போது, கார் கொடுவாய்காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, அப்போது திருப்பூரில் இருந்து பழனி நோக்கி எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மீது அதி வேகமாக மோதியது.



கார் பேருந்து மீது மோதிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடோடி வந்து பார்த்த பொழுது காரில் பயணித்த ஆறு பேரில் வீரக்குமார், முருகேசன், வெற்றி செல்வம் மற்றும் மகேஷ் குமார் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



உடன் பயணித்த சஜித் குமார் மற்றும் கிஷோர் ஆகியோர் பலத்த படுகாயங்களுடன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதுகுறித்து தகவல் அறிந்த ஊதியூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...