மழைக்காலம் என்பதால் பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்த பிறகு மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை..!

சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-

கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், பள்ளி வளாகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் தேங்கி இருக்கும் நீரின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் தடுக்க வேண்டும்.

தேவையில்லாத மரங்கள், புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். வகுப்பறைகளின் மேற்கூரைகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பாக வகுப்பறைகளை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...