கோவை ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி சென்னை தொழிலதிபர் உட்பட 3-பேர் மீது வழக்குப்பதிவு..!

பொய்யான புகார் அளித்ததால், மனவேதனை அடைந்து ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். ஜோதிடர் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதி பிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி சென்னை தொழிலதிபர் உட்பட 3-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் அருகே உள்ள வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரசன்னசாமி (வயது 41) ஜோதிடர். மேலும் இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இந்தநிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பிரசன்னசாமி ஜாமீன் கேட்டு ஜே.எம். 5 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி புகாரால் மிகுந்த மனவேதனை அடைந்த பிரசன்னசாமி, மற்றும் அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி, மகள் ஆகியோர் விஷம் குடித்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னசாமியின் தாய் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் செல்வபுரம் போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஜோதிடரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த கருப்பையா இடம் பிரச்சனை சம்பந்தமாக என்னை அணுகினார். அப்போது நான் புதிதாக குபரேஷ்வரர் கோவில் கட்டி வந்தேன். அதற்கு கருப்பையா நன்கொடையாக ரூ. 1 லட்சம் கொடுத்தார். அதன் பின்னர் ரூ.75 ஆயிரம் காசோலை கொடுத்தார். மேலும் பிரதோஷ பூஜைக்காக 6 முறை ரூ. 2 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர் நான், என்னுடைய மனைவி உள்பட 4 பேர் மீது ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் செயினை வாங்கி மோசடி செய்து விட்டதாக பொய்யான புகார் அளித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றோம். இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருந்தார். ஜோதிடர் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த கருப்பையா, அவரது மனைவி ரதி பிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...