'மாடு அறுவை கட்டணம் உயர்வு'-மாநகராட்சியை கண்டித்து கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஒரேயடியாக 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதனால் மாட்டிறைச்சியின் விலை உயரக் கூடும் எனவும், மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.


கோவை: மாடு அறுவை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கோவை மாநகராட்சியை கண்டித்து கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், 5-ரூபாயாக இருந்தஆடு அறுவைக்கு 100 ரூபாயும் 10-ரூபாயாக இருந்த மாடு அறுவைக்கு, 250-ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து, மாநகராட்சி கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக கோவை ஆத்துப்பாலத்தில் அறுவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஒரேயடியாக 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இதனால் மாட்டிறைச்சியின் விலை உயரக் கூடும் எனவும் கூறி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், கட்டணத்தை குறைக்கக்கோரி, ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால்தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்மாட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...