போத்தனூர்‌ மற்றும் பொள்ளாச்சி சந்திப்பை, கோவை இரயில் சந்திப்புக்கு நிகராக அமைக்க வேண்டும்: எம்.பி சண்முகசுந்தரம் கோரிக்கை

அவரது கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர்‌, உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர்‌ பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில்‌ தொடர்பு கொண்டு, கோரிக்கைகளின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்‌.



கோவை: பொள்ளாச்‌சி நாடாளுமன்ற உறுப்பினர்‌ கு. சண்முகசுந்தரம்‌ இன்று (03/08/2022) ரயில்வே வாரிய தலைவர்‌ வினய்‌குமார்‌ திரிபாத்தியை, டெல்லி ரயில்வே தலைமை அலுவலகத்தில்‌ நேரில்‌ சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.



கோரிக்கைகள்

- பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இருந்த ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும்.

- கோவை ரயில்‌ நிலையத்தில்‌ ரயில்களின்‌ பணிக் கொள்ளளவை பூர்த்தி செய்ததால்‌, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர்‌ சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில்‌ நிலையமாக அமைக்க வேண்டும்.

- பொள்ளாச்சியில்‌ இருந்து விவசாயிகள்‌ பெரும்‌ அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில்‌ இயக்க வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்‌.

பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ரயில்வே வாரிய தலைவர்‌, உடனடியாக தென்னக ரயில்வே பொது மேலாளர்‌ பி.ஜி. மல்லையாவை தொலைப்பேசியில்‌ தொடர்பு கொண்டு, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்‌ முன்வைத்துள்ள கோரிக்கைகளின்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...