கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் நின்ற வாகனம் மீது மோதி இளைஞர் பலி…!

கே.ஜி.சாவடி அருகே கேஸ் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வெற்றி விஜயன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அவரது இரு சக்கர வாகனம், ஈச்சர் வாகனத்தின் பின்னால் மோதியது.


கோவை: கோவை கே.ஜி.சாவடி அருகே நெடுஞ்சாலையில் நின்ற ஈச்சர் வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வெற்றி விஜயன் (37). இவர் கோவை நவக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெற்றி விஜயன் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு, மாலை மீண்டும் வீட்டிற்கு கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கே.ஜி.சாவடி அருகே முன்னால் சென்ற கேஸ் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத வெற்றி விஜயன், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அவரது இரு சக்கர வாகனம், ஈச்சர் வாகனத்தின் பின்னால் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகலறிந்து வந்த கே.ஜி.சாவடி போலீசார் வெற்றி விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த சம்பத்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...