மேட்டுப்பாளையம் அருகே ஒரு வயது குழந்தை மின்சார தாக்கி பலியான பரிதாபம்...!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லார் புளியன்தோப்பு பகுதியில், ஒரு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா. இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த சிறுமி தர்ஷா, சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடி வந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை சிறுமி எதிர்பாராதவிதமாக தொட்டதாக தெரிகிறது. அதில், மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட சிறுமியின் தாயார் அபிராமி, அங்கு ஓடி வந்தார். அப்போது, மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, மகளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டு சிறுமியின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...