கோவையில் குடும்பப் பிரச்சனையை வரதட்சணை வழக்காக பதிவு செய்து கணவரை கைது செய்த பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

இதுகுறித்து விசாரணை நடத்திய மாநில மனித உரிமை கமிஷன், ஆய்வாளர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


கோவை: சாதாரண குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சிறுமுகை எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர், இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார்.

இதனால் விஜயகுமார் ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தில் விஜயகுமார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "சாதாரண குடும்ப தகராற்றை, சரியாக விசாரிக்காமல் வரதட்சணை கொடுமை என்று தவறாக வழக்குப்பதிவு செய்து என்னை சிறையில் அடைத்து மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்காக ஆய்வாளர் மீனாம்பிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநில மனித உரிமை கமிஷன், ஆய்வாளர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...