கோவையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி..!

இதில் கலந்துகொண்டவர்கள் "குழந்தைக்கு இயற்கை தந்த அற்புத வரம் தாய்ப்பால், போஷன் அபியான் திட்ட வாசகங்கள், தாயும் சேயும் நலம் பெற கொடுப்பீர் தாய்ப்பால், தாய்ப்பால் தொடர்ந்து தருவதால் புற்றுநோயும் வராதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.



கோவை: உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் பகுதி சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணி அங்கன்வாடி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் மற்றும் கல்லூரி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

புலியகுளம் பகுதியில் உள்ள கிட்னி சென்டர் மருத்துவமனை அருகிலிருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபெற்றது.



இதில் கலந்து கொண்டவர்கள் "குழந்தைக்கு இயற்கை தந்த அற்புத வரம் தாய்ப்பால், போஷன் அபியான் திட்ட வாசகங்கள், தாயும் சேயும் நலம் பெற கொடுப்பீர் தாய்ப்பால், தாய்ப்பால் தொடர்ந்து தருவதால் புற்றுநோயும் வராதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...