திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் பொறுப்பேற்பு..!

திருப்பூர் மாநகரத்தின் 13-வது காவல் ஆணையராக பிரபாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை குறைப்பதே தனது முதல் வேலை என தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.



இதையடுத்து, திருப்பூர் மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாநகரில் கஞ்சா பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும், அதனால் திருட்டுகள் நடந்து வருவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

எனவே, எனது முதல் பணியாக திருப்பூர் மாநகரில் கஞ்சாவை முற்றிலும் ஒழித்து, திருட்டுகளை தடுப்பதேயாகும். அதே போல் மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் மூலம் மோசடிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், வங்கி சார்பில் யாரேனும் போன் செய்தால் அவர்களிடம் பேச வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் நேரடியாக வங்கிக்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...