வால்பாறை 57-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 85-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 37-மில்லி மீட்டர், சோலையாறு அணை 48-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.
கோவை: வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில்மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சின்ன கல்லாறு பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.
மழை மற்றும் அணைகளின் நிலவரம்:
வால்பாறை 57-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 85-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 37-மில்லி மீட்டர், சோலையாறு அணை 48-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.
சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3708-கன அடியாகவும், நீர் இருப்பு 5520-கன அடியாகவும், தற்போது 162-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்துநீர் வெளியேற்றம் 3863-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.