கோவையில் தங்க பட்டறை உரிமையாளர் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் கைது..!

தொண்டாமுத்தூரில் தங்க பட்டறை உரிமையாளர் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் மீது 4-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூரில் தங்க பட்டறை உரிமையாளர் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் வளையக்குட்டை எஸ்.எல்.வி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (62). இவர் கீழ் தளத்தில் வீடும், மேல் தளத்தில் தங்க பட்டறை அமைத்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மேல் தளத்தில் இருந்து பொருட்களை சுருட்டும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து சண்முக உள்ளே பார்த்த போது வடமாநில இளைஞர் ஒருவர் உள்ளே நின்றுள்ளார். இதை கண்ட சண்முகம் உடனடியாக கதவை வெளியே பூட்டியுள்ளார். பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் உள்ளே இருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் பதில் பேசாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த ஹபிபூர் ரகுமான் மகன் பரூக் அகமது (20) என்பது தெரியவந்தது.

மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன் கோவை வந்த பரூக் அகமது, வேலை தேடி அலைந்ததாகவும், இந்நிலையில் தொண்டாமுத்தூர் சண்முகம் வீட்டை இரண்டு நாட்களாக பார்த்ததாகவும் உள்ளே தங்க நகைகள் இருக்கும் என எண்ணி, சுற்றுசுவரை ஏறி மேல் மாடிக்குச் சென்று தங்கத்தை திருட முயன்ற போது சிக்கிக் கொண்டது.

இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...