கோவையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு - உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24 க்கு உட்பட்டஅவினாசி சாலை வழியாக டைடல் பார்க், விளாங்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், இந்த பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும், தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மழைநீரால் சேதமடைந்த விளாங்குறிச்சி பகுதியில்மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



மேலும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளுடனும் கலந்துரையாடினார். இதே போல மழை நீரில் சேதமடைந்த சாலைகளை கண்டறியவும், நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முத்து இராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம், மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...