கோவை தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது – 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்..!

தொண்டாமுத்தூர் – புதூர் சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடமிருந்த 1.2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூரில் கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் – புதூர் சாலை, பார்பர் காலனி அருகே இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தொண்டாமுத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையில் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்ட போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவரது மகன் விஜய் (26) என்பதும், அப்பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்த கஞ்சாவுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், மேலும் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...