குளங்களில் டீசல் படகுகள் இயக்கினால் மீன்கள் உயிரிழக்க கூடும்: கோவை வட்ட மீனவர்கள் எம்.எல். ஏ வானதி சீனிவாசனிடம் மனு.

குளங்களில் டீசல் படகுகள் விடுவதால், டீசல் வாடை மற்றும் டீசல் கசிவால், குளத்தில் உள்ள மீன்கள் மற்றும் அங்குள்ள பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். இதனால், குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: உக்கடம் பெரிய குளம் வாலாங்குளங்களில் டீசல் படகுகள் அனுமதிக்கப்பட்டால், மீன்கள் உயிரிழக்க கூடும் என்பதால் டீசல் படகுகள் இயக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, கோவை வட்ட மீனவர்கள், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் மனு அளித்துள்ளனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது:கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் மற்றும்வாலாங்குளம் ஆகிய இரு குளங்களிலும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு படகு இல்லம் வரவுள்ளது.

இந்த படகு நிலையத்தில், பெடல் படகுகள் மட்டுமே இயக்கப்படும் என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது டீசல் படகுகள் விடுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளங்களில் டீசல் படகுகள் விடுவதால்,டீசல் வாடை மற்றும் டீசல் கசிவால், குளத்தில் உள்ள மீன்கள் மற்றும் அங்குள்ள பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்குஆபத்து ஏற்படும். இதனால், குளங்களில் டீசல், பெட்ரோல் படகுகள் விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், டீசல் படகுகள் இயக்கினால், குளங்களில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்துள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை பெற்று கொண்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அவர்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நேற்றைய தினம் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புகார் எழுந்தால் மாநில மத்திய அரசுகளிடம்பேசுவதாக கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...