கோவை போத்தனூர் ரயில்வே பணிமனையில் விடுதலை போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி

கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை சார்பில் 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் குறித்த தகவல் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பணிமனை நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை போத்தனூர் ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் முரளிகிருஷ்ணா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்களும் பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்கள் சுதந்திர விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும் இந்த கண்காட்சியை பள்ளி குழந்தைகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...