கோவையில் கம்பியூட்டர் விற்பனை நிறுவனர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு

கோவையில் கம்பியூட்டர் விற்பனை நிறுவன உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை, தடாகத்தை அடுத்த சோமையனூர் வி.கே.வி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 30-ந்தேதி குடும்பத்துடன், சாய்பாபா காலணி வெங்கடாபுரம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார், உடனடியாக அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே இருந்த மரபீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணன் இதுகுறித்து தடாகம் போலீஸில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கைரேக தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...