மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 54-கோரிக்கை மனுக்கள் ஏற்பு - விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோவை மேயர் உத்தரவு.!

பொதுமக்கள்‌ அளித்த 54-கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலர்களுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமாரிடம்‌ 54-கோரிக்கை மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (02.08.2022) நடைபெற்றது.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்‌.



இக்கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 54 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 8 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 3 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 11 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 15 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 7 மனுக்களும்‌ ஆகமொத்தம்‌ 54 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌. இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளார்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

மேலும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 26.07.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயரிடம்‌ மேற்கு மண்டலத்தை சோர்ந்த கனகமணி, சந்திரமோகன்‌, மின்னு ஆபிரகாம்‌ ஆகியோர்‌ நகர நில அளவை தொடர்பான கோரிக்கை மனுக்கள்‌ மற்றும்‌ செந்தில்குமார்‌, ராமச்சந்திரன்‌, உமாதேவி ஆகியோர்‌ சொத்துவரியில்‌ திருத்தம்‌ குறித்த மனுக்களின்‌ மீது உரிய 7 நாட்களில்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருத்த ஆணையினை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ சம்பந்தப்பட்ட நபர்களிடம்‌ வழங்கினார்‌.

இக்கூட்டத்தில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, நகரமைப்பு அலுவலா்‌ கருப்பாத்தாள்‌, நகர்நல அலுவலர்‌ பிரதீப் வா.கிருஷ்ணகுமார்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துஇராமலிங்கம்‌, சங்கர்‌, சேகர்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, சுந்தாராஜ்‌, கருப்பசாமி, ஹேமலதா, புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ விமலா, ஜெயலட்சுமி, கலாவதி, சத்யா, பாபு, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...