சூலூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு..!

ஆதாயக் கொலை, திருட்டு வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை கைது செய்த சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்ட சூலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரிநாராயணன், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் நடந்த ஆதாய கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட எஸ். பி பத்ரி நாராயணன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் நடந்த ஆதாய கொலையில் காளி (எ) காளிதாஸ்(32) என்ற குற்றவாளியை, காவல் ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் மகாராஜன் மற்றும் காவலர்கள் சந்துரு, முத்துகருப்பன், செல்லப்பாண்டி, பழனிகுமார் ஆகியோர், 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பிடித்தனர்.

அதே போல், சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் தலைமையில் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் ஆய்வு செய்த போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜெய பாண்டியம்மாள்(30) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல், கடந்த மூன்று நாட்களுக்கு முன் சூலூர் காவலர் திவாகர் இரவு ரோந்து காவலில் ஈடுபட்டிருந்தபோது, பட்டணம்புதூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற தேவி-28 என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் FRS செயலி மூலம் அவரை பழங்குற்றவாளி என்பதை கண்டறிந்து, உடனடியாக உதவி ஆய்வாளர் மற்றம் பெண் காவலரை வரவழைத்து அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அப்பெண் அவரது கணவருடன் சேர்ந்து சூலூர் காவல்நிலைய சரகத்தில், வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. உடனடியாக, அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.



இவ்வாறு, ஆதாயக் கொலை, திருட்டு வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை சிறப்பாக செயல்பட்டு கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்ட சூலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வர்களர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரிநாராயணன் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...