நீர் நிலைகளை மாசுபடுத்தும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகள்: தடை விதிக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள்..!

மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு வரும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


கோவை: பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.



தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் எதிரான இந்தப் பொருள் நீர்நிலைகளில் கரைக்கும் பொழுது நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பெருக்கத்தை குறைக்கிறது.



மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நீரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். அதனை மாற்றி சுற்றுச்சூழலுக்கு சீர் கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து வணங்கி அதனால் என்ன பயன் காணப் போகிறோம் நாம்..?? என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.



எனவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சிலைகளை பறிமுதல் செய்யவும், மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இவ்வகையான சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தமிழக அரசுக்கு மற்றும் அதனை சார்ந்த துறைகளுக்கு கோரிக்கை கடிதத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளதாகவும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...