சாலைகளில் நீர்த்தேக்கம்: "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என விமர்சித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை மாநகராட்சி 77 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் பழுதடைந்த சாலைகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் செவி சாய்க்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி 77 வதுவார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், ராமமூர்த்தி சாலை பகுதியில் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளதால்,அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழையால்,சாலையில் ஆங்காங்கே குழிகளில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பலமுறை சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையினர் செவி சாய்க்காததால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியி சார்பில் இன்று நூதன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதியில், "இது கோவை மாநகராட்சியின் நவீன நீர்த்தேக்க திட்டம்" என்றபதாகைகளை வைத்து விமர்சித்தனர்.



இனியும், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...