கோவை தனியார் பள்ளி விடுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் 3-பேர் திடீர் மாயம்..!

மாணவர்களின் அறையை சோதனையிட்ட போது விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.


கோவை: கோவை காரமடையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின், விடுதியில் தங்கி படித்து வந்த 3-மாணவர்கள் நேற்று மாலை திடீரென விடுதியிலிருந்து மாயமாகினர்.

இதையடுத்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். ஆனால் மாணவர்கள் விடுதி முழுவதும் எங்கும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் அறையை சோதனையிட்ட போது அங்கு தங்களுக்கு விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் மாயமான மூன்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அதில், ஒரு மாணவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...