வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க அனைத்து கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில், இப்பணிக்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இது தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பேசுகையில் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இன்று முதல் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை இணைப்பதற்கு கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டு சாவடி நிலைய அலுவலர் வழங்கும் 6B படிவத்தை பூர்த்தி செய்து வழங்கியோ அல்லது www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது VOTER HELP LINE செயலி மூலமோ சுயமாக ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ சேவை மையங்களை அணுகியும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனவும், ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை படிவம் 6B உடன் இணைத்து சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் இப்பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...