கோவை சுங்கம் – ராமநாதபுரம் புதிய மேம்பாலம் மற்றும் சக்தியமங்கலம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைப்பொறியாளர் எஸ்.சி. மண்டல் மற்றும் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் ஆகியோர் கோவை - சத்தியமங்கலம் - கர்நாடகா எல்லை சாலையை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக நடைபெற்று வரும் கோவை - சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் கோவை அரைவட்ட சாலை அமைக்கும் பணி, ஆகிய இரு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகளை தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயல்படுத்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் (MORT,H) மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அதன் அடிப்படையில் மத்திய தரைவழிபோக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைப்பொறியாளர் எஸ்.சி. மண்டல் மற்றும் தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் ஆகியோர் கோவை - சத்தியமங்கலம் - கர்நாடகா எல்லை சாலையை ஆய்வு செய்தனர்.

மேலும் தேசியநெடுஞ்சாலை தலைமைப்பொறியாளர் என். பாலமுருகன் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் சுங்கம் – இராமநாதபுரம் சாலையில் ராமநாதபுரம் பாலத்தினை ஆய்வு செய்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...