சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மோசடியில் பின் புலமாக செயல்பட்ட மூன்றாவது நபரான திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த அம்மாசிராஜ் என்ற ராஜன்(48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.5.10 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 150 நபர்களிடம் ரூ.97 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கடந்த 13 தேதி, மோகன் கிருஷ்ணன் (39) என்பவரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவருடன் அந்நிறுவனத்தை நடத்திய ராமமூர்த்தி (38) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த ராமமூர்த்தி என்பவரை மாவட்ட குற்றப்பிரிவில் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் மோசடியில் பின் புலமாக செயல்பட்ட மூன்றாவது நபரான திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த அம்மாசிராஜ் என்ற ராஜன்(48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.5.10 லட்சம் பணமும் மற்றும் ராமமூர்த்தி என்பவரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர், இரண்டு நபர்களையும் குற்றவியல் நீதித்துறை-6 நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...