திருப்பூர் சைசிங் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்

பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லானது செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான தொழிலாளர்கள் சிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் தொழிலாளர்கள் யாரும் நிறுவனத்திற்க்கு வராத நிலையில் நிறுவனத்திலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சம்பவம் குறித்து.



உரிமையாளருக்கும், பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போராடி தீயை அனைத்தனர்.



இந்த தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நிறுவனம் விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பாதிப்பின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...