அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை பேரூராட்சி தலைவர் தொடக்கி வைத்தார்

அப்துல் கலாம் நினைவாக 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகர், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.


கோவை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி ஒக்கிலிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியினை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகர், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.



நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, நிரஞ்சன், அரவிந்த், கவுரி, சுதர்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...