செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள் இன்போசிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி அறிவுரை

கோவை புத்தக கண்காட்சியில் நடைபெற்ற தொழிலாளர் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் சுஜித்குமார் பேசுகையில் மனிதனுக்கு அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்தாலும் அவன் பிடிக்காத வேலையை செய்தால் அவனால் எதையும் முழுமையாக செய்ய முடியாது என பேசினார்.



கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் கோவை புத்தக திருவிழா கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

இதன் 9ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று தொழிலாளர்கள் நிகழ்ச்சியாக நடந்தன. காலை முதல் தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

மேலும் தொழிலாளர்களில் சிறந்த வாசகர் விருது வழங்கப்பட்டது. அதன்படி மாலை 5 மணிக்கு சிந்தனை அரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை கோவை புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த் வரவேற்றார். விழாவில் மாற்றம் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலரும், சென்னை இன்போசிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டு வர்த்தக தலைவர் சுஜித்குமார் கலந்து கொண்டு ஒர்க்லைன் பேலன்ஸ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது 'நான் 21 ஆண்டாக இன்போசிசில் வேலை செய்கிறேன். இவ்வளவு நாள் ஒரே கம்பெனியில் வேலை செய்வதால் வேறு கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை போலும் என்று சிலர் நினைக்கலாம். இப்போது ஒரு ஆண்டு வேலை செய்தாலே அவருக்கு அந்த கம்பெனியில் நீண்ட நாள் வேலை செய்ததற்கான விருது வழங்கப்படுகிறது. எனவே பல ஆண்டுகள் ஒரே கம்பெனியில் வேலை செய்வது என்பது ஐ.டி. கம்பெனியில் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

இப்போது ஐ.டி. கம்பெனியில் பலர் வேலைக்காக கம்பெனிக்கு வருவதில்லை. வீடுகளிலிருந்தே வேலை செய்கிறார்கள். அவர்களை கம்பெனிக்கு வாருங்கள் என்று தான் சொல்கிறோம். ஆனால் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு திங்கட்கிழமை என்றாலே வருத்தமான நாளாக இருக்கும். அதுவே வார இறுதி நாள் வெள்ளிக்கிழமை என்றால் பரவசமாக இருப்பார்கள். எனவே வெள்ளி, சனிக்கிழமைகளில் தான் ஐ.டி. ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை அந்த சந்தோஷம் இருக்காது. காரணம் மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டுமே என்பதே.

எனக்கு பிடித்த வேலை செய்கிறோமா என்று ஒரு கண க்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 40 சதவீதம் உடன் வேலை செய்பவர்களோடு அதாவது கணவன்,மனைவி, குழந்தைகள். பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு உள்ள உறவுகள் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த 40 சதவீதம் நீ பிடித்த வேலை செய்கிறாயா, என்பது தான். 10 சதவீதம் தான் பணத்துக்காக வேலை செய்வது. மீதி 10 சதவீதம் நீ உனக்கு பிடித்த வேலையை செய்கிறாயா என்பது தான். எனவே தொழிலாளராக இருந்தாலும் சரி, மேனேஜராக இருந்தாலும் சரி நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி உங்களுக்கு பிடித்த வேலை செய்கிறீர்களா என்பது தான். பிடிக்காத வேலை செய்பவர்கள் எப்படி என்றால் கரையான் அரிக்கிற மாதிரியான நிலையில் இருப்பார்கள்.

எனவே படிக்கும் போதே உங்களுக்கு எது வருமோ அதை படியுங்கள். அதில் படித்து விருப்பமான வேலை செய்யுங்கள். அப்படி விருப்பமான வேலை செய்யும் போது அவர்கள் வேலை செய்யும் இடத்திலும், மற்ற இடங்களிலும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே செய்கிற வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். அப்படி பிடிக்காத வேலையைத் தான் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த வேலையையும் மகிழ்ச்சியுடன் செய்ய பழகிக் கொள்ளுங்கள். அப்போது தான் மகிழ்ச்சி சிலர் ஏதோ வேலை செய்ய வேண்டும் என்ற நிலையில் தான் வேலை செய்கிறார்கள். கடைசி வரை திருப்தி இல்லாமலேயே வேலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள்.

 

அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. மனிதனுக்கு அனைத்து வாய்ப்புகளை கொடுத்தாலும் அவன் பிடிக்காத வேலையை செய்தால் அவனால் எதையும் முழுமையாக செய்ய முடியாது. எனவே அடுத்த தலைமுறைக்காவது அதாவது உங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை தைரியமாக எடுத்து படிக்க சொல்லுங்கள். எனவே நமக்கு எது வருமோ அதை செய்வது தான் புத்திசாலித்தனம். 

பிடிக்காததை எடுத்து படிப்பது முட்டாள்தனம். இதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு துறையில் சாதிக்க வேண்டுமென்றால் ஒரு நாள் இரவில் அதில் புகழ் பெற்று விடமுடியாது. படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அதற்கேற்றவாறு நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நான் பேச்சாளன் என்பதால் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். நான் என் கம்பெனிக்கு 140 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அப்போது நான் காரில் செல்லும்போது செல்போனில் பதிவு செய்துள்ள புத்தகங்களை ஹெட்போனில் கேட்டு கேட்டுக்கொண்டேயிருப்பேன். நாம் உடனுக்குடன் அவ்வப்போது நமது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த துறையில் நிலைத்து நிற்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ரூட்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், கோவை தொழிலாளர் துறை இணை ஆணையாளர் லீலாவதி மற்றும் கொடிசியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கவுரவ செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார். விழாவில் தொழிலாளர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கைககு பெரிதும் துணை நிற்பது அன்பான குடும்பமே. அதிக வருமானமே என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடந்தது. பின்னர் தொழிலாளர்கள் பங்கு பெற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...