வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விட்டீர்களா? - நாளை கடைசி நாள்..!

வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டுக்கு ரூ.5-லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.


கோவை:ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 3-வருடங்களாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கிடையே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து ஜூலை 31-ம் தேதிக்குள் வரியை கட்ட முடியாது என்பதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் #Extend_Due_Date_Immediately #ExtendDueDate போன்ற ஹேஷ்டேக் வைரலானது. குறிப்பாக பெரும்பாலானோர் இந்த ஹேஷ்டேக்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தை டேக் செய்திருந்தனர்.

ஆனாலும் கால நீட்டிப்பு கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. எனவே நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுவது நல்லது. அதன்பின்னர் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000-அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5-லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.5-ஆயிரம் செலுத்த வேண்டும்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...