'சாக்கடை கால்வாய் பாலம் உடைப்பு'- பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் துணைத்தலைவரின் செயலை தட்டிக் கேட்ட நகர்மன்ற உறுப்பினர்..!

32-வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் உடைத்ததாக கூறி 32-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் 'என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம்?', என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் துணைத் தலைவர் சாக்கடை கால்வாயை தன்னிச்சையாக உடைத்ததாக கூறி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகர மன்ற மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர மன்ற தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள திட்டத்தில் ஆள் இறங்கு குழிகளை செப்பனிடுவது, நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மேலும், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது 32 வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு சாலையில் இருந்த சாக்கடை கால்வாய் பாலத்தை துணைத் தலைவர் கௌதமன் தன்னிச்சையாக உடைத்ததாக கூறி 32 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெருமாள் என்னைக் கேட்காமல் எனது வார்டில் எப்படி பாலத்தை உடைக்கலாம், இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறி துணைத் தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, கவுன்சிலர்கள் சிலரும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்ததால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகர மன்ற தலைவி வார்டு உறுப்பினர்களை சமாதானம் செய்து வைத்தார். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...