கோவை பொள்ளாச்சி அருகே 'அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்'-2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது..!

12-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து மாணவி புகார் தெரிவித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே பள்ளிமாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தன் பள்ளியில்12-ம்வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், சைல்டு லைன் எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழு மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் கோவை சித்ரா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...