தொடர் விபத்து எதிரொலி: கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் வளைவில் இரும்பு தடுப்புகள் பொருத்தம்….!

ஆபத்தான வளைவாக கருதப்படும் மேம்பாலத்தின் சுங்கம் வளைவில் சாலை தடுப்புகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு, 30 மீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மற்ற வளைவுகளில் இதேபோல இரும்பு தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை - திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ராமநாதபுரம் அல்வோ்னியா பள்ளி முதல் ரெயின்போ வரை 3.1 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையில், பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள் இரு சக்கர வாகன ஓட்டிகள் இருவர், பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.



இருவரும் அதி வேகமாக வாகனத்தை இயக்கியதால், விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக வேகத்தடை, இரும்புத் தடுப்புகள், ஒளிரும் பட்டைகள் என பல்வேறு முயற்சிகள் காவல்துறை சார்பாக எடுக்கப்பட்டது.



இருப்பினும், மீண்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி சுங்கம் வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் வேககட்டுப்பாடுகள் குறித்தான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டது.



அதையடுத்து, இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.



இந்நிலையில், ஆபத்தான வளைவாக கருதப்படும் மேம்பாலத்தின் சுங்கம் வளைவில் சாலை தடுப்புகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு, 30 மீட்டர் தொலைவிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து, மற்ற வளைவுகளில் இதேபோல இரும்பு தடுப்புகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இது போல் தடுப்புகள் அமைக்கபடுவதால், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் வந்து விபத்தில் சிக்கினாலும், பாலத்தில் இருந்து கீழே விகுந்து உயிரிழக்கும் அபாயம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்களை தவிர்க்க வேறென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்னது குறித்து போக்குவரத்து போலீசார், மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...