கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிமினி விளக்கு மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் 100 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: 100 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் ஆண்களும், பெண்களும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாதந்தோறும் மின் கட்டண செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டுமென கூறி கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் தலைமையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



இதில் 100க்கும் மேற்பட்டோர் கையில் சிமினி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மின் கட்டண உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் பெண்கள் உட்பட பலர் வரிசையில் நின்று கண்டனங்களை தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...