கோவை மாநகராட்சியில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை

கோவை மாநகராட்சி பகுதிகளில் மேலும் மூன்று மண்டலத்தில் தெருநாய்கள்‌ கருத்தடை மையம், புதிதாக ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தெரு நாய்கள்‌ பிடிப்பதற்கு மாநகராட்சி தொண்டு நிறுவனம்‌ மூலம்‌ எங்கெல்லாம்‌ நாய்கள்‌ தொந்தரவு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்பும்‌ பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌, இந்த தொண்டு நிறுவனத்தை முன்கூட்டியே எந்தெந்த பகுதிக்கு செல்ல வேண்டும்‌ என்பதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி மக்களுக்கு தொந்தரவு செய்யும்‌ தெரு நாய்களை பிடிக்கும்‌ பணி தொடாந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று 29.07.2022 கரும்புக்கடை, ஆசாத்‌ நகர்‌, சாரமேடு, திப்பு நகா்‌, மதினா நகர்‌, குழந்தைகவுண்டா்‌ வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம்‌ ஆகிய இடங்களில் நாய்கள் பிடிக்கும் பணி நடந்தது.

தொடர்ந்து நாளை 30.07.2022 அல்‌அமீன்‌ காலனி, ரோசா கார்டன்‌, புல்லுக்காடு, ஹவுசிங்‌ யூனிட்‌ மெயின்‌ ரோடு, பொன்விழா நகர்‌, மணியகாரம்பாளையம்‌, கணபதி ஆகிய பகுதிகளிலும்.

01.08.2022 அன்று அன்பு நகா்‌, அற்புதம்‌ நகா்‌, சவுகார்‌ நகா்‌, சேரன்‌ நகரிலும்.

02.08.2022 அன்று அண்ணா காலனி, கரும்புக்கடை பள்ளி வாசல்‌ வீதியிலும்.

03.08.2022 அன்று நஞ்சுண்டாபுரம்‌, பெருமாள்‌ கோவில்‌ வீதி, மாரியம்மன்‌ கோவில்‌, பாடசாலை வீதி, பரீபதி நகா்‌, நேதாஜி நகர்‌, SMV கார்டனிலும்.

04.08.2022 அன்று சாரமேடு, காந்தி நகா்‌, கிரீன்‌ பார்க்‌, நாணியா நகா்‌, ஜே.ஜே.கார்டன்‌, சபா கார்டன்‌, மெட்ரோ சிட்டி, போயஸ்‌ கார்டனிலும் நாய்கள் பிடிக்கும் பணி நடக்கும்,

மேலும்‌, மேற்கு மண்டலம்‌ சீரநாய்க்கன்பாளையம்‌ மற்றும்‌ கிழக்கு மண்டலம்‌ ஒண்டிப்புதூர்‌ பகுதிகளில்‌ தெருநாய்கள்‌ கருத்தடை மைமானது செயல்பட்டு வருகிறது. மற்ற மூன்று மண்டலத்திற்கு தெருநாய்கள்‌ கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிரவாகம்‌ விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...