பல்லடம் அருகே அதிகாலை செல்போன் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் திருட்டு

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடியவரை சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் பல்லடம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சனுப். இவர் பல்லடம், சின்னக்கரை அருகே லட்சுமிநகர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற அவர் இன்று காலை கடைக்கு வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 புதிய செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கடையில் இருந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.



சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் அந்த மர்ம நபரை வலை தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...