'கல்லூரி மாணவர்கள் தான் எங்க டார்கெட்'- கோவையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது: 32-கிலோ கஞ்சா பறிமுதல்..!

செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.


கோவை: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 32-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாதவன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் யூசப் மற்றும் போலீசார் ஞானவேல், மாதேஷ், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ரயில் நிலையம் பின்புறம் உள்ள கூட்செட் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் 32-கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த முத்தாலப்பன் (37), என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

அப்போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அந்த அழைப்பை எடுத்து போலீசார் அதில், எதிரே பேசிய இளைஞர் கஞ்சா விற்று விட்டாயா? பணம் எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார்.

உடனே போலீசார் அவரிடம் கஞ்சா விற்று விட்டேன் வெரைட்டி ஹால்ரோடு வந்து பெற்றுக் கொள்ளவும் என தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்த அந்த இளைஞர் வெரைட்டி ஹால் ரோடு அருகே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜா (41) என்பதும் அவர் செல்வபுரத்தில் குடோனை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் மேலும், இவர்கள் இரண்டு பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...