ஆடி அமாவாசையில் 'பால் குடம் ஏந்தி யோகேஸ்வர லிங்கத்திற்கு வழிபாடு'- ஆதியோகி முன்பு குவிந்த கிராம மக்கள்..!

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் பால்குடம் ஏந்தி வந்து பூஜை செய்தனர். பூஜையுடன் சேர்த்து சிலம்பாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது.


கோவை: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் பால்குடம் ஏந்தி வந்து பூஜை செய்தனர். இதில் போளுவாம்பட்டி, செம்மேடு, முட்டத்துவயல், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக செம்மேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுமணி கூறுகையில்,

“சத்குரு ஆதியோகி திருவுருவத்தை எங்களுடைய ஊரில் பிரதிஷ்டை செய்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆதியோகியை தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு ஒவ்வொரு அமாவாசையும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த மக்கள் பூஜை செய்வதற்கான வாய்ப்பை சத்குரு எங்களுக்கு வழங்கியுள்ளார்.



அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று எங்களுடைய ஊர் மக்கள், சிவ வாத்தியங்களுடன் பால்குடம் ஏந்தி வந்து யோகேஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை மென்மேலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான கனகராஜ் கூறுகையில்,

“இந்த அமாவாசை பூஜைக்கான செலவுகள் அனைத்தையும் எங்களுடைய சொந்த செலவிலேயே செய்துள்ளோம். மக்களுக்கு அன்னதானமும் வழங்குகிறோம்.



இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஊர் திருவிழாவை போல் பங்கேற்றுள்ளோம்.

ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கரகம் எடுப்பது, பச்சரிசி படையல் வைப்பது என முழு ஈடுப்பாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர்.



இந்த பூஜை எங்களுக்கும் ஈஷாவுக்குமான பிணைப்பை காட்டுகிறது” என்றார்.



பூஜையுடன் சேர்த்து சிலம்பாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது.



இந்த அமாவாசை பூஜையானது கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...