வேட்டை தொடரும்.. கதி கலங்கும் கந்து வட்டி கும்பல்: புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!

இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்குமாறும், இந்த நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் டிஜிபி ஆணைக்கிணங்க மேலும் தொடரும் எனவும், Finance-யில் கந்துவட்டி மேற்கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: 'ஆப்ரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று கட்டி வட்டி புகார் வழக்கில் ஒரே நாளில் 19 பேரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், நேற்று 41 இடங்களில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 19 FIR கள் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று நடந்த இந்த சோதனையில் 1.26 கோடி பணம், 379 நில சம்பந்தமான ஆவணங்கள், 127 செக் லீப், 48 ATM கார்டுகள், 18 பேங்க் பாஸ் புக், 54 வெற்று கையெழுத்து காகிதங்கள், 211 ஆர் சி புத்தகங்கள், 230 அக்கவுண்ட் புத்தகங்கள், 3 பாஸ்போர்ட்கள், 7 ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் யாருக்கேனும் இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் 3 கந்துவட்டி வழக்குகளில் 2 பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் டிஜிபி ஆணைக்கிணங்க மேலும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும் Finance யிலேயே கந்துவட்டி மேற்கொண்டால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...