கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு தர்ணா போராட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை:கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு அதிகமாகப் பத்தாயிரமும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் வழங்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்காக 25 சதவிகித பணியிடங்களைப் பதவி உயர்வுகளுடன் நிரப்ப வேண்டும், உரிமை விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து ஊதியம் பெறும் சலுகையை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக மாநில பதிவாளர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு B வகை வங்கி ஊழியர்களுக்கான ஊதிய பயன்களை வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரொக்கமாக பெரும் தொகைக்கு இரண்டு சதவிகிதம் வருமான வரி பிடித்ததை நிறுத்த வேண்டும்.

நூற்றாண்டுகள் கடந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 6 மணி வரை இந்த தர்ணா போராட்டம் ஆனது நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம்தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...