குரங்கம்மை நோய் பரிசோதனைக்கு தமிழக அரசு ஐ.சி.எம்.ஆரிடம் அனுமதி கேட்டிருந்தது, ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்தது, அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வகம் அமைக்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று இன்னும் நீங்காத நிலையில் தற்போது பரவி வரும் 'குரங்கம்மை 'நோய் பரிசோதனைக்கு தமிழக அரசு ஒன்றிய அரசின் ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தது அதனை கருத்தில் கொண்டு ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் அனுமதி அளித்த நிலையில் கிண்டியில் உள்ள 'கிங் இன்ஸ்டிட்யூட்' இல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார், தமிழகத்தில் முதல் கோவிட்-19 பரிசோதனை ஆய்வகமாக இந்த கிங் இன்ஸ்டிட்யூட் இல் உள்ள வைராலஜி துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது, நாட்டிலேயே அதிகம் கோவிட்-19 பரிசோதனை செய்த ஆய்வகங்களில் ஒன்றான வைரலாஜி பிரிவு ஆய்வகம் இதுவரை கிட்டத்தட்ட 31 லட்சம் மாதிரிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளது, குரங்கம்மை என்பது ஒருவகையான வைரஸ் நோயாகும் இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் தாக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார், உலகளவில் 18,597 நபர்களுக்கு குரங்கமை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை 14ந் தேதி அன்று முதல் நபருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது, இன்று வரை மொத்தம் இந்தியாவில் நான்கு நபர்களுக்கு குரங்கமை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த நோய் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சுவாச துளிகள், நெருக்கமான தொடர்பு, மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது மேலும் கடுமையான தோல் அரிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் உடல் பலவீனம் ஆகியவை இருந்தால் அவைகள் குரங்கம்மை தொற்று நோயின் அறிகுறிகளாகும்.
இந்த நோய்க்கு பரிசோதனை தொடங்க நம் நாட்டில் உள்ள 15 ஆய்வகங்களுக்கு பயிற்சி அளித்துள்ளது, தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய்க்கு கிங் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள வைராலஜி பிரிவு ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்வதற்கு பயிற்சி மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகள் மருத்துவ குறிப்புகளுடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும், மாதிரிகள் ஆனது சிறுநீர் மற்றும் பிளாஸ்மா ஆகிய மருத்துவ மாதிரிகள் கிங் இன்ஸ்டிட்யூட் மற்றும் பூனே ஆகிய ஆய்வகங்களில் இணையாக பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பூனே ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டு பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்தார்.