கோவை புத்தக திருவிழாவில் 'திருக்குறள் திரள் வாசிப்பு' – மாணவர்களிடையே திருக்குறள் வாசித்த மாவட்ட ஆட்சியர்..!

புத்தகத்தில் திருவள்ளுவர் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஆட்சியர், அதனை பார்வையில் குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அதில் எல்லா நிறங்களும் உள்ளது அது ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் திருக்குறள் வாசிக்கும் திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு சில காரணங்களால் மாவட்ட ஆட்சியர் சமீரன் தாமதமாக கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.



மேலும், 4 ஒழுக்கம், கல்வி, செல்வம் ஆகிய அதிகாரங்களில் இருந்து 4- திருக்குறள்களை வாசித்தார்.



ஆட்சியர் வாசிக்க வாசிக்க மாணவர்களும் வாசித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததாகவும், இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேச்சு போட்டிகள் நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் அனைவருக்கும் திருக்குறள் பதிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அனைவரும் ஒரு புத்தகமாவது வாங்கி செல்வோம் என உறுதி கூறியுள்ளதாகவும் கூறினார். மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், அது தவறான கருத்து, நார்மலாக தான் அச்சடிக்கப்பட்டது. அதனை பார்வையில் குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அதில் எல்லா நிறங்களும் உள்ளது அது ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.

அட்டுக்கல் விவகாரம் குறித்த கேள்விக்கு, இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை முடிந்து அது குறித்து விளக்கமாக கூறுகிறேன் என தெரிவித்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...