கோவை‌ மாநகராட்சி மத்தியம்‌ மற்றும்‌ வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு..!

சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.174-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75-லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 7 கூடுதல்‌ வகுப்பறை கட்டடங்கள்‌ மற்றும்‌ அபிவிருத்தி பணிகளை விரைவாக செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை‌‌: கோவை‌‌ மாநகராட்சி, வடக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.4க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.174 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.83 கிலோ மீட்டார்‌ தொலைவிற்குத் தார்‌ சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பணியை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தினார், வார்டு எண்‌.10க்குட்பட்ட ஷாஜகான்‌ நகரில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 7 கூடுதல்‌ வகுப்பறை கட்டடங்கள்‌ மற்றும்‌ அபிவிருத்தி பணிகள்‌ மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அப்பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தை நேரில்‌ சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்குச் சமைக்கப்படும்‌ உணவின்‌ தரம்‌ மற்றும்‌ சுவை குறித்து ஆய்வு செய்து குழந்தைகளுடன்‌ கலந்துரையாடினார்‌.



முன்னதாக, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌ 48க்குட்பட்ட இரத்தினபுரி, இராதாகிருஷ்ணன்‌ சாலையில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினா்‌ பிரபா ரவீந்திரன்‌, உதவி ஆணையாளர்கள்‌ சங்கர்‌, மோகனசுந்தரி, செயற்பொறியாளர்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, புவனேஸ்வரி, சுகாதார அலுவலாரகள்‌ இராமச்சந்திரன்‌, இராதாகிருஷ்ணன்‌ சுகாதார ஆய்வாளர்‌ சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...